பாகிஸ்தானில் பேருந்து விபத்து.. 17 பேர் பலி, 5 பேர் காயம்

4230பார்த்தது
பாகிஸ்தானில் பேருந்து விபத்து.. 17 பேர் பலி, 5 பேர் காயம்
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த மற்றொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் அதிவேகம், போக்குவரத்து விதிகளை மீறுதல், ஓட்டுநர் சோர்வு போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி