மதுரை விராலிபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் சென்டர் மீடியனில் ஏறியது. விபத்தின் போது பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.