நெல்லை அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து - 20 பேர் காயம்

3695பார்த்தது
நெல்லை அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து - 20 பேர் காயம்
நெல்லை பொன்னாக்குடி அருகே வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற ஆம்னி பேருந்து லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி