உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில், பள்ளி மாணவியின் புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்தரித்து வாட்ஸ்அப்பில் பரப்பிய பள்ளி பஸ் ஓட்டுநர் சஞ்ஜீத் குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.55,000 அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 2025ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பீம்புரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவியின் தந்தையை மிரட்டிய குற்றச்சாட்டும் இதில் அடங்கும்.