மேற்கு வங்கத்தில் இன்று (நவ.7), பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில், 40 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகிலுள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.