புதுச்சேரியில் காதலர் தினத்தை முன்னிட்டு மதுக்கடை ஒன்றில் சலுகை அறிவித்து போர்டு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு முழு பாட்டில் ஒயின் வாங்கினால் 4 டின் பீர் இலவசம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்த கலால் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சலுகை விலையில் மது விற்கக் கூடாது என எச்சரித்தனர். இதையடுத்து சலுகை ரத்து செய்யப்பட்டதால் மதுபிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.