4K,8K டிவிகளில் அதிக பணம் செலவழிப்பது வீண் தான் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. ஆய்வின்படி, 44 இன்ச் அல்ட்ரா எச்டி (UHD) டிவியை 2.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போது, பார்வையாளர்கள் QHD திரைகளுக்கும் 4K/8K திரைகளுக்கும் இடையே எந்தவொரு காட்சி மேம்பாட்டையும் கண்டறிய முடியவில்லை. QHD தெளிவுத்திறனே மனித கண்ணின் காட்சி வரம்பை பூர்த்தி செய்வதால், மிக அதிக தெளிவுத்திறன் கொண்ட டிவிகள் தேவையற்றவை என ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.