தமிழகத்தில் காலியாகவுள்ள 7 சட்டசபைத் தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவற்றுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.