சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அதிமுக மூத்த தலைவர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி வருகை தந்துள்ளனர். தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ள நிலையில், தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதால், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.