அதிமுக கொறடா நியமனம் தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை, சி.வி சண்முகம் தரப்பினர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதிமுகவின் இபிஎஸ் அணியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும், சி.வி.சண்முகம் தரப்பில் விஜயபாஸ்கரையும் கொறாடாவாக நியமனம் செய்ய மனு அளித்தனர். இந்நிலையில், இரு தரப்பில் இருந்து யாரை கொறாடாவாக நியமிக்க என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது சி.வி.சண்முகம் தரப்பினர், சாபாநாயகரை சந்தித்துள்ளனர்.