அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து கொறடா நியமனம் தொடர்பாக பேசியுள்ளனர். அதிமுக இபிஎஸ் தரப்பு, வேலுமணி தரப்பு என இரண்டாக பிளவு ஏற்பட்ட சூழலில், தொடர்ந்து 3வது நாளாக சபாநாயகரை வேலுமணி தரப்பினர் சந்தித்துள்ளனர். தங்கள் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள கொறடாவை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.