டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பத்தின் எதிரொலியாக, பிரதமர் மோடி தலைமையில் நாளை (நவ., 12) அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. பூட்டான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நாளை நேரடியாக டெல்லி வந்தவுடன் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனுடன் பாதுகாப்பு விவகாரங்களுகான கூட்டமும் நடைபெறவுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.