கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பேக்கரி கேக்
மாஸ்டர் பூவரசன் (30) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 சிறார்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூவரசன் பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில், அப்பெண்ணின் இரு மகன்களும் தங்களது Free Fire மொபைல் வீடியோ கேம் குழு நண்பர்களை அழைத்து வந்து அவரை தாக்கியுள்ளனர். இதில் பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.