காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை அருகே சாலையில் சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையில் சுற்றித் திரிந்த கன்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தின் நடுவில் அந்த கன்று சிக்கிக்கொண்டது. பதறிப்போன் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திய நிலையில், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த கன்றை மீட்டார். பேருந்து மோதிய விபத்தில், அந்த கன்றுக்கு சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை. இருந்தபோதிலும், சாலையில் திரியும் மாடு, ஆடுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.