ஆண் கர்ப்பமாக முடியுமா என்ற கேள்விக்கு, மகாராஷ்டிராவின் சஞ்சு பகத் (Sanju Bhagat) என்பவரின் நிலை மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியது. சஞ்சு பகத்தின் வயிற்றில் பெரிய கட்டி (Tumor) இருப்பதாக முதலில் மருத்துவர்கள் கருதினர். ஆனால், அறுவை சிகிச்சையின்போது, அவர்கள் வயிற்றில் வளர்ச்சியடையாத சிசு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது, ‘ஃபோட்டஸ் இன் ஃபோட்டூ’ எனப்படும், அரிதான மருத்துவ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.