சர்க்கரை மற்றும் பால் சேர்க்காத பிளாக் காபியில் உள்ள பாலிஃபெனால்கள் மற்றும் ஆன்டிஅக்ஸிடன்ட்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதை குறைத்து, கொழுப்பு கல்லீரல் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. தினமும் மிதமான அளவில் பிளாக் காபி அருந்துவது கல்லீரல் செல்கள் சேதமடைவதை தடுத்து, அதன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை உணவுக்கு பிறகு அல்லது மதிய வேளையில் இதனை அருந்துவது நல்லது என்றும், வெறும் வயிற்றில் இதை குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.