தினமும் கொய்யா இலை நீரை முடியில் தடவலாமா?

கொய்யா இலையை நீரில் இட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை தலைமுடியில் தடவி வந்தால் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். உச்சந்தலையில் ஏற்படும் அழற்சி பிரச்சனைகளை குறைக்கும். இதில் இருக்கும் லைகோபீன் புற ஊதாக் கதிர்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கும். மேலும் தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். முடி பொலிவு மற்றும் பளபளப்பு பெறும். இதில் உள்ள கொலோஜன் கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும்.
