வெயிலுக்கு இதமாக தோன்றினாலும், மிக குளிர்ந்த ஐஸ் தண்ணீரை தொடர்ந்து குடிப்பது செரிமான மண்டலத்தை பாதித்து தொண்டை வலியை ஏற்படுத்தக்கூடும். இது உடலில் வெப்பநிலையை சட்டென மாற்றுவதால் ரத்த நாளங்கள் சுருங்கி ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கலாம். மண்பானை தண்ணீரை அருந்துவதே உடலுக்குக் குளிர்ச்சியும் ஆரோக்கியமும் தரும் சிறந்த வழியாகும்.