"பெரிய வார்த்தைகள் பேசலாமா?" - சேகர்பாபுவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

73பார்த்தது
"பெரிய வார்த்தைகள் பேசலாமா?" - சேகர்பாபுவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்
அமைச்சர் சேகர்பாபுவின் பதவி காலம் குறித்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (நவ.13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமைச்சர் சேகர்பாபு நல்ல நண்பர்தான். எனது பதவி மியூசிக்கல் சேர் என்கிறார். எனது பதவி 3 ஆண்டுகள் தான். ஆனால் அவரது அமைச்சர் பதவி இன்னும் 3 மாதங்கள் தான்” என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், “அதிமுக கட்சியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்” என்றார்.

தொடர்புடைய செய்தி