பெண்களை போலவே ஆண்களுக்கும் மார்பக திசுக்கள் இருப்பதால், அரிதாக இருப்பினும் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆண்களுக்கு மார்பக பகுதியில் வீக்கம், கட்டிகள், தோலில் மாற்றங்கள் அல்லது காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது தாமதமாகிறது என்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.