“திமுக அமைச்சர்களுக்கும் மட்டுமல்ல முதலமைச்சருக்கும் நாவடக்கம் வேண்டும்” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “முதலமைச்சரிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்; முட்டாள் தனமாக ஆட்சி செய்வதால் முட்டாள் மு.க. ஸ்டாலின் என சொல்லலாமா?. உங்களுக்கு நாவடக்கம் வேண்டும். திருப்பி பேசுவதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. உங்களை பார்த்து எப்போதும் பயப்பட்டது கிடையாது, பயப்படப்போவதும் கிடையாது” என்றார்.