“மருத்துவரை துன்புறுத்தலாமா?”.. தவெக MLA சரவணனுக்கு கடும் எதிர்ப்பு

11பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவரை ஓய்வில் இருந்து எழுப்பி கேள்வி கேட்டதாக தவெக MLA சரவணன் மீது புகார் எழுந்துள்ளது. நோயாளிகள் இல்லாத நேரத்தில் இரவுப்பணியில் இருக்கும் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அனுமதி உள்ளதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசின் நடைமுறையை அறியாமல் மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்துவதாகவும், பிற துறைகளைவிட மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் சூழல் இருப்பதாகவும் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி