தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த அரசு மருத்துவரை தவெக MLA சரவணன் எழுப்பி அண்மையில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக தலைமை, "மக்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால், இதேபோன்று மாலை 5 மணிக்கு மேல் உங்கள் கட்சி தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளது.