அமெரிக்காவுடனான வர்த்தக
போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இணை உறுப்பினராக' கனடாவை சேர்க்கும் முயற்சியில் அந்நாட்டின்
பிரதமர் மார்க் கார்னி முயற்சித்து வருகிறார். அமெரிக்காவை மட்டுமே பெருமளவில் சார்ந்திருக்கும் பொருளாதார சூழலை மாற்றியமைக்கவும், தனது நாட்டின் வர்த்தக பாதுகாப்பை உறுதி செய்யவும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.