ஆந்திர உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த YSR Congress வேட்பாளர் பிரசாத் ரெட்டி, வாக்காளர்களுக்கு தான் கொடுத்த லஞ்ச பணத்தைத் திரும்ப தருமாறு கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.10 வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்ததாக கூறியுள்ள அவர், ஓட்டு போடாத 400 வாக்காளர்கள் பணத்தை தராவிட்டால் 'மாரியம்மன் சும்மா விடமாட்டாள்' என்றும் எச்சரித்துள்ளார். மேலும், வாக்காளர்கள் திருப்பி கொடுக்கும் பணத்தை வைத்து அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.