இந்தியாவில் முதன் முறையாக ரூ.182 கோடி மதிப்புள்ள ஜிஹாதி போதை பொருள் எனப்படும் கேப்டகான் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 11ம் தேதி டெல்லியில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 31 கிலோ கேப்டகான் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது” என தெரிவித்துள்ளது.