டெல்லி: செங்கோட்டை அருகே சாந்தினி சௌக்கில் கார் வெடிப்பு சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, வியாபாரிகளிடையே அச்சம் நிலவுகிறது. இதனால், சாந்தினி சௌக்கில் உள்ள கடைகள் இன்று (நவ., 11) மூடப்படும் என சாந்தினி சௌக் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய் பார்கவ் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்புச் சம்பவத்தால் ஏற்பட்ட சத்தமும், அதன் அதிர்வும் சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும், மக்கள் ஓடத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.