மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே இரவு நேரத்தில் குறுக்கு வழியில் சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோரக் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருட்டு காரணமாக ஓட்டுநரால் கிணற்றைக் கவனிக்க முடியாததால் நேர்ந்த இத்துயரச் சம்பவத்தில், 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, ஆபத்தான நிலையில் உள்ள அந்தக் கிணற்றை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.