கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேல் நாரியப்பனூரில் உள்ள அந்தோனியார் கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.