மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர்-ஜான்சி நெடுஞ்சாலையில், மணல் ஏற்றி வந்த டிராக்டர் மீது ஃபார்ச்சூனர் SUV கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் கார் முழுவதுமாக சேதமடைந்ததில், காரில் பயணித்த 5 நண்பர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.