தலைநகர் டெல்லியில் ஷாப்பிங் செல்பவர்களின் சுமையை குறைக்கும் வகையில், பைகளை சுமந்து செல்லும் 'கேரிமென்' என்ற புதிய புதுமையான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்களின் பைகளை சுமப்பது மற்றும் பில்லிங் வரிசையில் நிற்பது போன்ற பணிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு (12 கிலோ வரை) ரூ.149 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டெல்லியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தச் சேவை, விரைவில் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.