புதுடெல்லியில், ஷாப்பிங் செய்பவர்களின் சிரமத்தைப் போக்க 'கேரி மேன்' என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லஜ்பத் நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையில், பயிற்சி பெற்ற உதவியாளர்கள் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் பைகளை சுமந்து செல்வார்கள். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுடன் வருவோர் மற்றும் பண்டிகை காலங்களில் ஷாப்பிங் செய்வோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 நிமிடங்களுக்கு ரூ.79, ஒரு மணி நேரத்திற்கு ரூ.149 கட்டணத்தில், ஒரு நபர் சுமார் 12 கிலோ எடை வரை சுமப்பார். விரைவில் மற்ற பகுதிகளுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.