டெல்லி: “பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம் ஏற்படும்போது, அதனைக் கலைக்க கால வரம்பு இருக்கக் கூடாது. இது தொடர்பான வழக்குகளையும் ஒரே வாரத்தில் முடிக்கும் வகையில் சட்டத்தை திருத்த வேண்டும்” என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், சிறுமியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் என சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. ‘விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.