பாஜக அமைச்சர் மீது வழக்கு: ஆடியோ வெளியானதால் அதிர்ச்சி

5686பார்த்தது
பாஜக அமைச்சர் மீது வழக்கு: ஆடியோ வெளியானதால் அதிர்ச்சி
ராஜஸ்தானில், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கவுதம் குமார் தக், போலீசாரை ஆபாசமாக பேசி, தாக்க முயன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சைத்தான் சிங் மற்றும் இரண்டு போலீசாரை அமைச்சர் பொதுவெளியில் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சைத்தான் சிங் அளித்த புகாரின் பேரில், அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தல், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, அமைச்சர் போலீசாரை திட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி