'புலி' படத்திற்காகப் பெற்ற 15 கோடி வருமானத்தை மறைத்ததாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மோசடி மற்றும் குற்றச்சதி பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த சட்டச் சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.