ஈரோடு மாவட்டம் அந்தியூரில், உரிய அனுமதி இன்றி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாதக தீவிர பரப்புரையில் மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நாதக சார்பில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.