கேரளம் மாநிலத்தில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், மாணவனின் காதைப் பிடித்து சிபிஎம் நிர்வாகி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் திருகியுள்ளார். இந்நிலையில், அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளது. இந்தியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவரை மேடைக்கு அழைத்து, முகவரியை இந்தியில் எழுதக்கூற, அம்மாணவன் தவறாக எழுதியதால் காதைப் பிடித்து அவர் திருகியதாக கூறப்படுகிறது.