ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் காரில் தொங்கியபடி, TVK TVK விசில் அடித்து அலப்பறையில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்த கேணிக்கரை போலீசார், அவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர். அதே போல், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தவெகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.