நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

15520பார்த்தது
நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக நடிகை வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தகவல் அளித்த நிலையில் அதனை உச்ச நீதிமன்றத்தில் நடிகை தரப்பு மறுத்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஜாமீனை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்தி