கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு பகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மணிகண்டன், சிறுவர்களுக்கு மிட்டாய், பிஸ்கெட் வாங்கி கொடுத்து, விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும், பிரசாரம் செய்யவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்றல் என்பவர் அளித்த புகாரின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் உதவியுடன் தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தியதாக மணிகண்டன், அரவிந்தன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.