சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில், மணப்பெண்ணின் குடும்பத்தினர் அவரைத் திரைப்படப் பாணியில் கடத்திச் சென்றுள்ளனர். மேடக் மாவட்டம் எல்லபுரம் கிராமத்தில், மணமகன் பிரணய் வீட்டிற்கு 4 கார்களில் வந்த பெண்ணின் உறவினர்கள், தடுத்தவர்களை மிரட்டிவிட்டு அப்பெண்ணைக் கடத்தினர். இத்திருமணம் தொடர்பாகப் போலீசில் சமரசம் பேசிய அன்றே இச்சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் மௌனம் காப்பதாக மணமகன் வீட்டார் கூறுகின்றனர்.