காவிரியில் உரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆணையம் உத்தரவிட்ட அளவு நீர் முழுமையாகக் கிடைக்கவில்லை என தமிழக அரசு வாதாடிய நிலையில், நீர் பங்கீடு மற்றும் இருப்பு குறித்த கள நிலவரத்தை ஆய்வு செய்ய ஆணையமே தகுதியான அமைப்பு எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆணையத்திடம் முறையிட உத்தரவிட்டனர்.