காவிரி நீர் இன்று தமிழக எல்லைக்கு வருகை.. விவசாயிகள் எதிர்பார்ப்பு

2881பார்த்தது
காவிரி நீர் இன்று தமிழக எல்லைக்கு வருகை.. விவசாயிகள் எதிர்பார்ப்பு
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், இன்றைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீரின் வருகையை எதிர்நோக்கி தமிழக விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை மலர் தூவி வரவேற்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், தமிழக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி