கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (நவ.03) சிபிஐ அதிகாரிகள் பனையூர் தவெக அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். இதுகுறித்து பேசிய தவெக நிர்வாகி சி.டி.நிர்மல் குமார், "கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க தவெக அலுவலகம் வந்தனர். போட்டோ மற்றும் சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர்" என கூறினார்.