மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று (பிப்., 17) முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாடு முழுவதும் 29,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மொத்தம் 43 லட்சத்து 67,870 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 8,074 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் 10ஆம் வகுப்புக்கு கணிதமும், 12ஆம் வகுப்புக்கு உயிரிதொழில்நுட்பம் முனைவோர் பாடமும் தேர்வு நடைபெறுகிறது.