தேர்தலையொட்டி, பாலிவுட் திரையுலக கலைஞர்கள், சச்சின் டெண்டுகர் உள்பட முக்கிய விளையாட்டு வீரர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்ற நிலையில், பகல் 1.30 மணி நிலவரப்படி தேர்தல் நடைபெற்ற 29 மாநகராட்சிகளிலும் 29.22 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார் 46 - 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கக்கூடும் என்று கணித்திருப்பதாக தெரிவித்தார்.