தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு செல்போன்கள் அனுமதிக்கப்படாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், வாக்குச்சாவடிக்கு வெளியில் செல்போன் பாதுகாப்பகம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நாளில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும், தேர்தல் ஆணையத்தில் மொபைல் செயலியில் பதிவேற்றப்படும் என கூறியுள்ளார்.