தூங்குவதற்கு முன் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது, அதன் நீல ஒளி (Blue Light) காரணமாக மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பை பாதித்து தூக்கத்தின் தரத்தை குறைக்கலாம். இதனால் தூக்கமின்மை, கண் சோர்வு, தலைவலி, கவனச்சிதறல் மற்றும் மறுநாள் சோர்வு ஏற்படலாம். தொடர்ந்து இந்த பழக்கம் இருந்தால் மனஅழுத்தம் அதிகரிப்பதுடன், உடல்நலத்திலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நன்றாக உறங்க, தூங்குவதற்கு குறைந்தது 30 - 60 நிமிடங்களுக்கு முன் செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது.