இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மூத்த குடிமக்களின் பராமரிப்பு நலனை உறுதி செய்ய, மத்திய-மாநில அளவில் பிரத்தியேக விதிகள் உள்ளன. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் மனுவை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு. அதேபோல, உத்தரவுகளை பிறப்பிக்க துணை கோட்ட வருவாய் வட்டாட்சியர் தலைமையில் தீர்ப்பாயமும் செயல்படுத்தலாம். மேல்முறையீடை விசாரிக்க ஆட்சியர் தலைமையில் குழுவும் உண்டு.