வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதால், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் அவசர தேவைக்கு தூதரக மின்னஞ்சல் cons.caracas@mea.gov.in அல்லது +58-412-9584288 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் நிலைமை சீராகும் வரை இந்தியர்கள் வெனிசுலா செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.